ஜூன் 8ஆம் திகதி பிரதமராக பதவியேற்கும் மோடி
இந்திய பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) எதிர்வரும் 8ஆம் திகதி மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டெல்லியில் இன்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில், பிரதமர் மோடி ஜனாதிபதியை சந்தித்து ஆட்சி அமைக்க கோர உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆதரவு தேவை
2024 இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. 240 இடங்களில் பாஜக வென்றுள்ளது. பாஜக ஆட்சி அமைக்க என்டிஏவில் உள்ள தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், ஆதரவு தேவை.

இது போல லோக் ஜனதா கட்சி, ஷிண்டேவின் சிவசேனா கட்சி ஆகியோரின் ஆதரவும் தேவை. இவர்களின் ஆதரவு எல்லாம் இருந்தால்தான் பாஜக ஆட்சி அமைக்க முடியும். இனிமேல் இவர்கள் சொல்வதுதான் சட்டம் என்ற நிலைமை பாஜகவிற்கு ஏற்பட்டு உள்ளது. 2024 லோக்சபா தேர்தலில் கிட்டத்தட்ட 292 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
பாஜக தனியாக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 97 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 229 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் மோடி கூட்டணி ஆட்சி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
கடந்த வாரம் வாட்டர்மெலன் ஸ்டார்.. இந்த வாரம் யார் எலிமினேஷன் தெரியுமா? வெளிவந்த உறுதியான தகவல் Cineulagam
முறைத்துக்கொண்டு நின்ற பிரஜன், Chair தூக்கிப்போட்டு விஜய் சேதுபதி அதிரடி- பிக்பாஸ் 9 புரொமோ Cineulagam
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri