உலகக் கிண்ணத்துடன் நாடு திரும்பிய இந்திய அணிக்கு மோடி வரவேற்பு
ஐசிசி 20க்கு 20 உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்ட இந்திய அணியை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துள்ளனர்.
பார்படோஸில் (Barbados) இருந்து சிறப்பு விமானம் மூலம் புறப்பட்ட இந்திய அணி வீரர்கள், இன்று (4.7.2024) அதிகாலை டெல்லி விமான நிலையம் வந்தடைந்துள்ளனர்.
டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா கோப்பையை வெற்றி பெற்றிருந்தது.
An excellent meeting with our Champions!
— Narendra Modi (@narendramodi) July 4, 2024
Hosted the World Cup winning team at 7, LKM and had a memorable conversation on their experiences through the tournament. pic.twitter.com/roqhyQRTnn
ரோஹித் சர்மா தலைமை
இதன்போது விமான நிலையத்தில் ரசிகர்களின் வரவேற்பின் பின்னர், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் பிரதமரின் இல்லத்திற்குச் சென்று அவரை சந்தித்துள்ளனர்.
அத்துடன் அவர்கள் பிரதமருட ன் காலை உணவையும் உட்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து அணியினர் இன்று மாலை மும்பாயில் இடம்பெறவுள்ள திறந்த பேருந்து வெற்றி அணிவகுப்பில் இந்திய வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதன்போது ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அணிவகுப்பில் பங்கேற்று இந்திய அணியுடன் வெற்றியைக் கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

கூலி படத்தில் வெறித்தனமான வில்லனாக நடிக்க சௌபின் சாஹிர் வாங்கிய சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
