உச்சக்கட்டப் போருக்கு மத்தியில் இந்திய பிரதமர் உக்ரைனுக்கு பயணம்
உச்சக்கட்டப் போருக்கு மத்தியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உக்ரைனுக்கு சென்றுள்ளார்
ஏற்கனவே ரஷ்யாவுக்கு சென்ற, அவர் ஜனாதிபதி புட்டினை சந்தித்து போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்தை நடத்திய நிலையில் அதன் தொடர்ச்சியாகவே மோடி, உக்ரைன் சென்றுள்ளார்.
போர் நிறுத்தம்
சுமார் 8 மணிநேரம் ரஷ்யாவில் தங்கியிருக்கும் அவர், ஜனாதிபதி செலன்ஸ்கியை சந்தித்து, போர் நிறுத்தம் குறித்து முக்கிய சந்திப்பை நடத்தவுள்ளார்.
இதேவேளை, வெளிநாடுகளுக்குச் செல்லும் போது வழக்கமாக விமானத்தில் செல்லும் அவர், உக்ரைன் நாட்டிற்கு தொடருந்து மூலமாகவே சென்றுள்ளார்.
விமானத்தில் செல்லாமல் சுமார் 20 மணி நேரம் பிரதமர் மோடி,போலந்தில் இருந்து தொடருந்தில் பயணிக்கும் காரணமும் வெளியிடப்பட்டுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் மோதல் காரணமாக உக்ரைனில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.
இதன் காரணமாகவே பிரதமர் மோடி தொடருந்தில் மூலம் உக்ரைன் சென்றுள்ளார்.