பிரான்ஸில் தமிழில் திருக்குறள் கூறி அசத்திய நரேந்திர மோடி! குவியும் பாராட்டு
பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழில் திருக்குறள் கூறி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின் அழைப்பை ஏற்று, அந்நாட்டின் தேசிய தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் அரசு முறை பயணமாக பாரிஸ் சென்றுள்ளார்.
இதன்போது பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட நரேந்திர மோடி, பிரான்ஸ் வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
"ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்" என்ற திருக்குறளை தமிழில் படித்து பலரது பாராட்டையும் பெற்றுள்ளார்.
ஒரு தாய் தனது பிள்ளையை பிறர் சான்றோன் என மற்றவர் சொல்லும் போது, அந்த தாய்க்கு பெற்றெடுக்கும் போது கிடைத்த இன்பத்தை விட கூடுதலாக ஆனந்தம் இருக்கும். பிள்ளையை பெற்ற போது கிடைத்த மகிழ்ச்சியை விட அவர்களின் சாதனை அதிக மகிழ்ச்சியை கொடுக்கும். இது தாய்க்காக கூறப்பட்டது.
இதற்கமைய, நீங்கள் வெளிநாடுகளில் நல்ல பெயர் வாங்குகிறீர்களா, உலகம் உங்களை பாராட்டுகிறதோ அப்போது பாரத தாய்க்கும் இதே போன்ற மகிழ்ச்சி கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், பாரிஸ் நகரில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan

சின்ன மருமகள் சீரியலில் முக்கிய நபர் மரணம்.. கதறி அழும் தமிழ் செல்வி! அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam
