மோடியின் விசேட தூதர் ஜனாதிபதி அநுரவிடம் நேரில் தெரிவித்த முக்கிய விடயம்

Anura Kumara Dissanayaka Dr. S. Jaishankar Government Of Sri Lanka Government Of India
By Rakesh Dec 23, 2025 05:21 PM GMT
Report

பேரிடர் நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையை மீட்டெடுக்கும் உதவித் திட்டத்தின் முதல்கட்டமாக இந்தியா 450 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 13 ஆயிரத்து 500 கோடி ரூபா) மறுசீரமைப்பு தொகுப்பை இலங்கைக்கு வழங்க முன்வந்துள்ளது. 

இந்தியப் பிரதமர் மோடியின் சிறப்பு தூதராக நேற்று இலங்கைக்கு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் இன்று காலை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்தார்.

அப்போது இந்தச் சிறப்பு உதவி பற்றிய திட்டம் குறித்த விவரங்களை இலங்கை ஜனாதிபதியிடம் இந்தியப் பிரதமரின் விசேட தூதுவர் தெரிவித்தார்.

கனடாவில் கோர விபத்தில் உயிரிழந்த ஈழத்தமிழர்

கனடாவில் கோர விபத்தில் உயிரிழந்த ஈழத்தமிழர்

 350 மில்லியன்

இந்த 450 மில்லியன் அமெரிக்க டொலர் உதவித் தொகுப்பில் 350 மில்லியன் அமெரிக்க டொலர் சலுகைக் கடன் வசதிகளைக் கொண்டது. மிகுதி 100 மில்லியன் அமெரிக்க டொலரும் மானியங்களாக வழங்கப்படும்.

மோடியின் விசேட தூதர் ஜனாதிபதி அநுரவிடம் நேரில் தெரிவித்த முக்கிய விடயம் | Modi S Special Envoy Told President Anura Person

இந்தத் தொகுப்பு இலங்கை அரசாங்கத்துடன் நெருக்கமான ஆலோசனைகளின் பின்னர் இறுதி செய்யப்படுகின்றது என்று தெரிவித்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர், பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உதவி வழங்க இந்தியா முன்னுரிமை கொடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று காலை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட விசேட கடிதத்தையும் கையளித்தார்.

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களின் நிவாரணம் மற்றும் புனர்வாழ்வு முயற்சிகளுக்கும், இயல்பு வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கும் இந்தியப் பிரதமரும் இந்திய அரசாங்கமும் அளித்த மனப்பூர்வமான ஆதரவை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நன்றியுடன் பாராட்டினார்.

மீட்புப் பணிகளுக்கு ஹெலிகள், மருந்துகள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளை வழங்குவதிலும், சேதமடைந்த வீதிகளை மீளமைப்பதிலும், மகியங்கனை வைத்தியசாலை உள்ளிட்ட வைத்தியசாலை கட்டமைப்பை மறுசீரமைப்பதிலும் இந்திய அரசாங்கம் அளித்த விசேட ஆதரவையும் ஜனாதிபதி நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

பாடசாலை மாணவிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி - கல்வியமைச்சின் முக்கிய அறிவிப்பு

பாடசாலை மாணவிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி - கல்வியமைச்சின் முக்கிய அறிவிப்பு

புதிய அத்தியாயம் 

ஒவ்வொரு கடினமான சமயத்திலும் இந்தியா இலங்கைக்கு வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவை ஜனாதிபதி ஞாபகமூட்டியதோடு பேரழிவுக்குப் பிறகு இலங்கையின் மீளமைப்பு செயற்பாட்டுக்கு வழங்கும் ஒத்துழைப்பு இந்திய - இலங்கை உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.

மோடியின் விசேட தூதர் ஜனாதிபதி அநுரவிடம் நேரில் தெரிவித்த முக்கிய விடயம் | Modi S Special Envoy Told President Anura Person

இந்தக் கடினமான சமயத்தில் இலங்கையுடன் பலமாக இணைந்திருக்கவும், இலங்கையை மீளக்கட்டியெழுப்பும் பணிகளுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளை வழங்கவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனக்கு அறிவுறுத்தியதாகவும், அந்த முயற்சிகளை ஆராய்வதற்காக இந்தியப் பிரதமரின் சிறப்பு பிரதிநிதியாக இலங்கைக்குத் தான் விஜயம் மேற்கொண்டதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுகள் ஆரம்பமானதோடு , இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

குறிப்பாக இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு தொடர்ந்து ஆதரவு வழங்கப்படும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார். இலங்கைக்கு இந்தியா வழங்கிய சலுகைப் பொதியை அடையாளப்படுத்தும் வகையில் கிளிநொச்சி ஏ - 35 வீதியில் உள்ள பேல் பாலத்தை திறந்து வைக்கும் நிகழ்வு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் இந்திய மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர்களின் பங்கேற்புடன் ஒன்லைனின் ஊடாக நடைபெற்றது.

ஜனாதிபதிக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையிலான பேச்சுகளில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ மற்றும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தைகளில், இந்திய அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்திய வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் புனித் அக்ரவால், இந்தியப் பிரதித் தூதுவர் சத்யஞ்சல் பாண்டே மற்றும் இலங்கை அரசாங்கத்தின் சார்பாக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே ஆகியோர் கலந்துகொண்டனர். அதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர், இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடனும் விரிவான பேச்சுக்களிலும் ஈடுபட்டார்.

தையிட்டி போராட்டத்தில் அடக்குமுறையின் ஆயுதமாக மாறியுள்ள சட்டம்! அருட்தந்தை மா.சத்திவேல் கண்டனம்

தையிட்டி போராட்டத்தில் அடக்குமுறையின் ஆயுதமாக மாறியுள்ள சட்டம்! அருட்தந்தை மா.சத்திவேல் கண்டனம்

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US