ட்ரம்புக்கு பதில் வழங்கிய மோடி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் 25 வீத இறக்குமதி வரி அறிவிப்பு தொடர்பில் இந்தியா தமது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது.
இதன்படி தேசிய நலனைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய இராச்சியத்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25வீத வரியை விதிப்பது என்று அமெரிக்க ஜனாதிபதி நேற்று அறிவித்திருந்தார்.
நண்பனாக இருந்தாலும், யுக்ரைனில் கொலைகளை செய்யும் ரஷ்யாவுடன் இந்தியா கொண்டிருக்கும் நட்பை கருத்திற்கொண்டு இந்த வரியை விதிப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில் அமெரிக்காவின் அறிவிப்பின் தாக்கங்களை தாம் ஆய்வு செய்து வருவதாக குறிப்பிட்டுள்ள இந்தியா, அண்மையில் ஐக்கிய இராச்சியத்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டமை உட்பட்ட, தேசிய நலனை கருத்திற்கொண்டு எதிர்கால நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம் அமெரிக்காவுடன் தொடர்ந்தும் பேச்சு நடத்தப்படும் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ஆம் நாள் மாலை திருவிழா





அமெரிக்காவுடன் மோதல்... எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை குறிவைக்கும் சீனா News Lankasri

சீனாவுக்கு புதிய நெருக்கடி... முதல் தாக்குதலுக்கு தயாராக ஜப்பான்: இந்த இடத்திலிருந்து குறி News Lankasri
