ட்ரம்பிடம் மோடி முன்வைத்த கோரிக்கை
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் வந்து 'ஐயா' (Sir) என்று அழைத்து, பல ஆண்டுகளாகத் தாமதமாகும் அபாச்சி (Apache) ஹெலிக்கொப்டர்களை விரைவாக வழங்கக் கோரியதாகத் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வோஷிங்டனில் நடைபெற்ற குடியரசுக் கட்சி எம்.பி.க்களின் கூட்டத்தில் பேசிய ட்ரம்ப், அமெரிக்காவின் ஆயுத உற்பத்தி மற்றும் விற்பனையில் உள்ள காலதாமதங்கள் குறித்து விவாதித்துள்ளார்.
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதால்
இதன்போது, "இந்தியா 68 அபாச்சி ஹெலிகொப்டர்களை கட்டளை செய்துள்ளது. பிரதமர் மோடி என்னிடம் வந்து, 'ஐயா, நான் உங்களைச் சந்திக்கலாமா?' என்று கேட்டார்.
ஐந்து ஆண்டுகளாகத் தாமதமாவதாகக் கூறியதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், ட்ரம்பின் இந்தக் கூற்றுக்களில் உள்ள புள்ளிவிபரங்கள் குறித்துச் சர்ச்சை எழுந்துள்ளது.

இந்தியா மொத்தம் 28 அபாச்சி ஹெலிகொப்டர்களை மட்டுமே கட்டளை செய்துள்ளது. இதில் ராணுவத்திற்கான கடைசி ஹெலிகொப்டர்களும் கடந்த 2025 டிசம்பரில் வழங்கப்பட்டு விட்டதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்தப் பேச்சின் போது ட்ரம்ப், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ள வரிகள் (Tariffs) காரணமாகப் பிரதமர் மோடி தன் மீது "மகிழ்ச்சியாக இல்லை" என்றும், ஆனால் இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தற்போது சர்வதேச ஊடகங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri