இந்தியாவுடன் அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ள ஒப்பந்தங்கள்: ஹர்ஷ வெளியிட்ட அறிவிப்பு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ள ஒப்பந்தங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப எதிர்பார்த்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா (Harsha de Silva) தெரிவித்துள்ளார்.
அத்தோடு, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (08) நாடாளுமன்ற அமர்வில் அது தொடர்பில் கேள்வியெழுப்பவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இன்று (6) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார சக்தி
அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த ஒப்பந்தங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல, ஆனால் இந்த ஒப்பந்தங்கள் குறித்து எங்களிடம் எந்த தகவலும் இல்லை.குறிப்பாக பாதுகாப்பு ஒப்பந்தத்தில் என்ன சேர்க்கப்பட்டுள்ளது என்பது எங்களுக்குத் தெரியாது.
இந்த ஒப்பந்தங்கள் குறித்து அறிந்துகொள்ள இந்த நாட்டு மக்களுக்கு உரிமை இருப்பதால் நாங்கள் அவர்களை நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்போம்.
இந்திய விஸ்தரிப்புவாதம் பற்றி கூச்சலிடும் ஒரு கட்சி மோடியை வரவேற்று அவருக்கு மிக உயர்ந்த கௌரவத்தை வழங்குவதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
ஏறக்குறைய பொருளாதார சக்தியாக விளங்கும் இந்தியாவுடன் இலங்கை இணைந்து செயற்பட வேண்டும் என்பதால் இதனைச் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |