பாரதிய ஜனதாக் கூட்டணியின் தலைவரான மோடி : வழங்கப்பட்ட ஆதரவு கடிதங்கள்
பாரதிய ஜனதாக் கூட்டணியின் தலைவராக நரேந்திர மோடியை(Narendra Modi) கூட்டணி தலைவர்கள் தெரிவு செய்துள்ளனர்.
இன்று நரேந்திர மோடியின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தின்போது இந்த தெரிவு மேற்கொள்ளப்பட்டது.
முன்னதாக ஆந்திராவின் எதிர்கால முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் பீஹாரின் முதல்வர் நிதிஸ்குமார் ஆகியோர், பாரதிய ஜனதாக் கூட்டணிக்கான தமது ஆதரவு கடிதங்களை வழங்கினர்.
அடிக்கோடிட்டுக் காட்டும் தீர்மானம்
அத்துடன் ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் சமூகத்தின் தாழ்த்தப்பட்ட பிரிவுகளுக்கு சேவை செய்வதற்கான கூட்டணி அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டும் தீர்மானத்தையும் கூட்டணியின் தலைவர்கள் நிறைவேற்றினர் என்று பி.டி.ஐ தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் நரேந்திர மோடி அடுத்து அரசாங்கத்தை அமைப்பதற்கான உரிமையை இன்றே இந்திய குடியரசுத்தலைவரிடம் கோருவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதேவேளை ஆட்சிக்கான ஆதரவுக்காக, நிதிஸ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவின் நிபந்தனைகள் மற்றும் அவற்றின் ஏற்பு என்பன குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |