பிரதமர் மோடியால் ஜனாதிபதி புடினை சமாதானப்படுத்த முடியும்: அமெரிக்கா கருத்து (Video)
இந்தியப் பிரதமர் மோடியால் ரஷ்ய ஜனாதிபதி புடினை சமாதானப்படுத்த முடியும் என வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் ஜோன் கிர்பி ( John Kirby) தெரிவித்துள்ளார்.
வொஷிங்டனில் நேற்றைய தினம் (11.02.2023) உக்ரைன் - ரஷ்யா போர் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் உக்ரைனுடனான போரை ரஷ்யா ஆரம்பித்தது. இந்தப் போர் ஓராண்டுகளுக்கு மேலாக இடம்பெற்று வருகின்றது.

பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்வு
போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று சர்வதேசங்கள் குரல் கொடுத்து வரும் நிலையில், பேச்சு வார்த்தைகள் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இந்த நிலையில், வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆணைய செய்தி தொடர்பாளர் ஜோன் கிர்பி, வொஷிங்டனில் செய்தியாளர்களுக்கு செவ்வியொன்றை அளித்துள்ளார்.
இதன்போது. அவரிடம், "உக்ரைன் போரை நிறுத்த இந்திய பிரதமர் மோடிக்கு இன்னும் நேரம் இருக்கிறதா அல்லது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை சமாதானப்படுத்த இன்னும் நேரம் இருக்கிறதா?" என செய்தியாளர்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

ஜோன் கிர்பி பதில்
அதற்கு ஜோன் கிர்பி பதிலளித்துள்ளதாவது,
உக்ரைன் போருக்கு ஜனாதிபதி புடின்தான் காரணம். அவரால் இப்போது கூட போரை நிறுத்த முடியும். ஆனால், அவர் தொடர்ந்து உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறார். இரு நாடுகள் இடையேயான விரோதம் முடிவுக்கு வர வேண்டும். பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தீர்மானிக்க வேண்டும்.
இந்தப் போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி முயற்சிக்கிறார். ஆனால், போரை நிறுத்த புடின் விரும்பாததால், நாங்கள் உக்ரைனுக்கு இராணுவ உதவி அளிக்க வேண்டியுள்ளது.
பிரதமர் மோடியால், புடினை சமாதானம் செய்ய முடியும். இதுகுறித்து பிரதமர் மோடியை மீண்டும் பேசும்படி கூறுவோம். உக்ரைன் போரை நிறுத்த அவர் எந்த முயற்சி எடுத்தாலும், அதை அமெரிக்கா வரவேற்கும் எனத் தெரிவித்துள்ளார்.
#WATCH | I'll let the PM speak to whatever efforts he's willing to undertake. US would welcome any effort that could lead to an end of hostilities in Ukraine: John Kirby on being asked if there is still time for PM Modi to stop the war or convince President Putin
— ANI (@ANI) February 10, 2023
(Source: WH) pic.twitter.com/6BOiR3VKea
சன் டிவியிடம் வேண்டுகோள் வைக்கும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்கள்... என்ன தெரியுமா? Cineulagam
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri
எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்.. நிலாவிடம் கண்கலங்கிய சோழன்.. அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam