தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்தில் அரசியல் சாசனத்தை வணங்கிய மோடி
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம் டெல்லியில் உள்ள பழைய நாடாளுமன்ற கட்டடத்தின் மைய அரங்கில் நேற்று(07) நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் கூட்டத்தில் பங்கேற்க பழைய நாடாளுமன்றத்துக்கு வந்த மோடி அனைவருக்கும் வணக்கம் வைத்துவிட்டு நேராக இந்திய அரசியலமைப்பு புத்தகம் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்று, அதை கையில் எடுத்து நெற்றியில் ஒத்திக்கொண்டுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி
பின்னர் அதை தலைவணங்கி தொட்டுக் கையெடுத்துக் கும்பிட்டு அதன்பின்னரே தனது இருக்கைக்குச் சென்று அமர்ந்துள்ளார்.
#WATCH | Prime Minister Narendra Modi respectfully touches the Constitution of India with his forehead as he arrives for the NDA Parliamentary Party meeting.
— ANI (@ANI) June 7, 2024
Visuals from the Central Hall of the Samvidhan Sadan (Old Parliament). pic.twitter.com/JU6D9M0Jca
குறித்த கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவராக நரேந்திர மோடி (Narendra Modi) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் அனைத்து தலைவர்கள், புதிதாக எம்பிக்களாக தேர்தெடுக்கப்பட்டவர்கள், மாநில முதல்வர்கள், பாஜக தலைவர்கள் என அனைவரும் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த கூட்டம் முடிவடைந்த பின்னர்,சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் உள்ளிட்ட கூட்டணியின் மூத்த தலைவர்களுடன் பிரதமர் மோடி ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |