விவசாய விரிவாக்கத்தில் நவீன தொழினுட்ப முயற்சி தேவை: சிறீதரன் எம்.பி தெரிவிப்பு
இந்த நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாயத் துறையின் மேம்பாட்டிலும், விரிவாக்கத்திலும் புதிய தொழினுட்ப முயற்சிகளை உட்புகுத்துவது காலத்தேவையானதாக மாறியிருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (31) நடைபெற்ற 'சக்திமான் வைக்கோல் கட்டும் இயந்திரத்தின்' அறிமுக நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எமது விவசாயிகள் எதிர்கொள்ளும் பல்வேறு நெருக்கடிகளை குறைத்துக்கொள்வதற்காக விவசாயம் சார் நவீன தொழினுட்ப இயந்திரங்களின் வருகையை நாம் வரவேற்க வேண்டியுள்ளது.
விசாயத்துறை
நெல் அறுவடையின் கழிவுப்பொருளாகக் கிடைக்கும் வைக்கோலை கால்நடைத் தீவனம் உள்ளிட்ட ஏனைய தேவைகளுக்கு பயன்படுத்துவதற்கு ஏதுவாக நவீன தொழினுட்பத் தரத்திலான இயந்திரம் ஒன்றின் அறிமுகம் விசாயத்துறையில் புதியதோர் மைல்கல்லாகவே அமையும் எனத் தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வில், சக்திமான் இந்திய நிறுவனத்தின் பணிப்பாளர், அந்நிறுவனத்தின் இலங்கைக்கான உதவிப் பணிப்பாளர், முகவர்கள், மட்டக்களப்பு மாவட்டத்தின் வந்தாறுமூலைப் பகுதியிலிருந்தும், அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பகுதியிலிருந்தும் வருகைதந்த வர்த்தகர்கள், விவசாயப் பெருமக்கள் மற்றும் கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், பிரதேச விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 12 மணி நேரம் முன்
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
பதறி அடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்து தாரா சொன்ன விஷயம், அதிர்ச்சியில் நந்தினி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri