கண்டியில் நடைபெற்ற மாதிரித் தேர்தல் (Photos)
சர்வதேச ஜனநாயக தினத்தை முன்னிட்டு கண்டியில் மாதிரித் தேர்தல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த மாதிரி தேர்தலானது, நேற்று (15.09.2023) கண்டி நகர மத்திய வர்த்தக சந்தை கட்டடத்தொகுதியில் இடம்பெற்றுள்ளது.
இம்மாதிரி தேர்தலில் கண்டி மாவட்ட மக்களுக்கு தேர்தல் தொடர்பான அபிப்பிராயங்களை வெளிப்படுத்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
மாதிரி தேர்தல்
கண்டியில் நடைபெற்ற மாதிரி தேர்தலில் 90.59 வீதமானோர் விரைவாக தேர்தலொன்றினை கோரியுள்ளதுடன் 51.83 வீதமானோர் ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை விரைவாக கோரியுள்ளனர்.
அதேவேளை 742 வாக்காளர்கள் வாக்குகளை பதிவு செய்ததுடன் 92.59 வீதமானோர் விரைவாக தேர்தலொன்று அவசியம் என தெரிவித்துள்ளதுடன், அதில் 26.54 வீதமானோர் ஜனாதிபதி தேர்தல் அவசியம் எனவும், நடைபெற்ற இந்த மாதிரித் தேர்தலின் ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகளின் படி 9.41 வீதமானோர் தேர்தல் அவசியமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர் .
இதேவேளை ஜனநாயக இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டாளர் கே.அர்ஜூன இதன்போது கருத்து
தெரிவிக்கையில்,
தேர்தல் தொடர்பில் மக்களுக்கு உள்ள ஆர்வத்தை வெளிக்கொணர்ந்ததுடன் தேர்தல் வேண்டாம் என குறிப்பிடும் ஒரு சிலர், வேண்டாம் என குறிப்பிடுவதற்கான காரணம் தேர்தல் தொடர்பான வெறுப்பு அல்ல, ஊழல் வாய்ந்த அரசியல்வாதிகள் தொடர்பான வெறுப்பையே அது புலப்படுத்துவதாக தெரிவித்தார்.
இந்த மாதிரி தேர்தலானது CAFFE அமைப்பு, தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் நிலையம் (CMEV), VIEW ஆகிய தேர்தல் கண்காணிப்பு நிலையங்களின் பிரதானிகளின் பங்குபற்றலுடன் நடைபெற்றுள்ளது.
மேலும் CAFFE அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் மனாஸ், தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் மத்திய நிலையத்தின் பிரதானி டி.எம்.திசாநாயக்க ஆகியோர் விரைவில் தேர்தலொன்றை நடத்துவதற்கான வாய்ப்பை விரைவாக உரிய பொறுப்புவாய்ந்த தரப்பினர் மேற்கொண்டு ஜனநாயகத்தினை பாதுகாக்க செயற்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ஆம் நாள் மாலை திருவிழா





எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam

மனிதர்களைக் கொல்ல ஆசை! பூனைகளை சித்திரவதை செய்த லண்டன் சிறுவன்: அதிர்ச்சி வாக்குமூலம்! News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan
