வவுனியாவில் காணி அமைச்சின் நடமாடும் சேவை முன்னெடுப்பு(Photos)
வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்ட மக்களின் நீண்டகால காணிப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையிலான நடமாடும் சேவை ஒன்று வவுனியாவில் இன்று இடம்பெற்றது.
இன்று (27) காலை 9 மணி முதல் வவுனியா காமினி மகா வித்தியாலயத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் காணி அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கலந்து கொண்டு நிகழ்வினை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கான காணி உரிமைப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், கு.திலீபன்,செல்வம்
அடைக்கலநாதன், காணி அமைச்சின் மேலதிக செயலாளர், மன்னார், முல்லைத்தீவு வவுனியா
மாவட்ட அரச அதிபர்கள், திணைக்கள தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.






