கண்டாவளை பிரதேச செயலகத்தின் இரண்டாவது நடமாடும் சேவை
ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலில் Clean SriLanka நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவின் இரண்டாவது நடமாடும் சேவை வேலைத்திட்டம் இன்று நடைபெற்றது.
குறித்த நடமாடும் சேவை கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன் தலைமையில் கல்லாறு தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இந்த நடமாடும் சேவையில் பல்வேறு சேவைகள், பணிகள் மக்களுக்கு ஒரே நாளில் முன்னெடுக்கப்பட்டது.
முன்னெடுக்கப்படும் சேவைகள்
குறிப்பாக பிறப்பு, இறப்பு மற்றும் உத்தேச வயது சான்றிதழ்கள் தொடர்பான சேவைகள், ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள் (தேசிய அடையாள அட்டை), ஓய்வூதியம் தொடர்பான சேவைகள், மோட்டார் வாகன பதிவு மற்றும் வாகன வருமான அனுமதிப்பத்திரம் தொடர்பான சேவைகள், வியாபார பெயர் பதிவு தொடர்பான சேவைகள், காணி தொடர்பான சேவைகள், சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், நலன்புரி நன்மைகள் தொடர்பான சேவைகள், முதியோர் தேசிய செயலகத்தினால் வழங்கப்படும் சேவைகள், சிறுவர் பெண்கள் உரிமைகள் தொடர்பான சேவைகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரிவு தொடர்பான சேவைகள், திறன் அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழிற்கல்வி வழிகாட்டல்கள், மனிதவள அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழில் வழிகாட்டல்கள், கைத்தொழில் திணைக்களம் தொடர்பான சேவைகள், கிராம அபிவிருத்தி பிரிவு தொடர்பான சேவைகள், சமய, கலாசாரப்பிரிவு தொடர்பான சேவைகள், சொத்தழிவு/காணாமல் போனோர் தொடர்பான சேவைகள், சமுர்த்தி கடன் சேவைகள், பிரதேச சபைகளால் வழங்கப்படும் சேவைகள், கமநல அபிவிருத்தி திணைக்களம் தொடர்பான சேவைகள், ஆயுள்வேத திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், விவசாயத் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், கால்நடை அபிவிருத்தித் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், மின்சார சபை தொடர்பான சேவைகள், நீர் வழங்கல் அதிகார சபை தொடர்பான சேவைகள், தென்னைப் பயிர்ச் செய்கை சபை தொடர்பான சேவைகள், பொலிஸ் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், தொழில் திணைக்களத்தால் வழங்கப்படும் சேவைகள், நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையால் வழங்கப்படும் சேவைகள், ஏனைய திணைக்களங்களினால் வழங்கப்படும் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பொதுமக்கள் ஒரே இடத்தில் இலகுவாக பெற்றுக்கொள்ளக் கூடியவகையில் குறித்த நடமாடும் சேவை நடைபெற்றது.



டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 56 நிமிடங்கள் முன்
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri