உரிமையாளர் கண்ணயர்ந்த நேரத்தில் நடந்த திருட்டு - பொதுமக்கள் உதவியை நாடும் பொலிஸார்
தலவாக்கலை பிரதான நகரில் கைபேசிகள் மற்றும் பாடசாலை உபகரணங்களை விற்பனை செய்யும் கடையின் உரிமையாளர் கடையில் இல்லாத நேரத்தில் அவருடைய கைபேசி திருடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று(16.07.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களிடம் கோரல்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தலவாக்கலை பிரதான நகரில் கைபேசிகள் மற்றும் பாடசாலை உபகரணங்களை விற்பனை செய்யும் கடையில் உரிமையாளர் மேசையில் இருந்த தொலைபேசியை கைகக்கு வாடிக்கையாளர் போன்று வந்த ஒருவர் திருடிச் செல்கிறார்.

இந்த சம்பவம் தொடர்பில் கடையின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கடைக்கு வந்தவர் கடையில் யாரும் இல்லை என்பதை உறுதிசெய்த பிறகு அந்த நபர் ஒருமுறை கடையை விட்டு வெளியேறி, இரண்டாவது முறையாக கைபேசியைத் திருடியதை பாதுகாப்பு கேமரா மூலம் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள், தலவாக்கலை பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்குமாறு கடையின் உரிமையாளர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.