117ஐ தொட்டு முன்னேற்றத்தின் பாதையில் தவெகவிற்கான ஆதரவு - சற்றுமுன் ஸ்டாலினின் அறிவிப்பு
புதிய ஆட்சி அமைய ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
புதிய அரசு அமைய வேண்டியது ஜனநாயகத்தின் முக்கிய பணி எனவும் அவர் கூறியுள்ளார்.
எக்ஸ் தள பக்க பதிவில் அவர் இந்த விடயத்தை சற்றுமுன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் வெடித்துள்ள ஆர்ப்பாட்டம்! காங்கிரஸ் கட்சியினர் மீது திமுகவினர் தாக்குதல் - மயிலாடுதுறையில் பரபரப்பு
அந்த பதிவில் மேலும், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டு விட்டது.
ஏற்கனவே இருந்த சட்டமன்றத்தையும் கலைத்து மாண்புமிகு ஆளுநர் அவர்கள் ஆணையும் பிறப்பித்து விட்டார்.
புதிய அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம்
இப்படியொரு நிலையில், தேர்தலில் வென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வதற்கும், மாநிலத்தின் நலனை முன்னெடுத்துச் செல்வதற்கும் புதிய அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மிக முக்கியப் பணி! இந்தச் சூழ்நிலையில் அரசு அமைவதில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அரசியல் சட்டப்படி, புதிய ஆட்சி அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உடனடியாக எடுத்திட வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்றுள்ளார்.
ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை ஆதரவை நோக்கி தவெக நகர்ந்து வரும் நிலையில் தற்போது 117 என்ற எண்ணிக்கையை தொட்டுவிட்டது.
இன்னும் விசிகவின் பதிலை எதிர்பார்த்து தவெக காத்திருக்கும் நிலையில் ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டு விட்டது. ஏற்கனவே இருந்த சட்டமன்றத்தையும் கலைத்து மாண்புமிகு ஆளுநர் அவர்கள் ஆணையும் பிறப்பித்து விட்டார். இப்படியொரு நிலையில், தேர்தலில் வென்ற…
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) May 8, 2026
ஸ்ருதி வீட்டில் விஜயாவிற்கு ஏற்பட்ட அவமானம், கைவிறித்த பார்வதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam