மித்தெனிய முக்கொலை: தப்பிச் சென்ற சந்தேக நபர் கைது
மித்தெனியவில் அண்மையில் நடந்த மூன்று கொலைகளுக்கு உதவியதாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர், துபாய்க்கு செல்ல முயன்றபோது, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் இரண்டு முன்னாள் இராணுவ வீரர்கள் உட்பட பத்துக்கும் மேற்பட்ட சந்தேக நபர்களை பொலிஸார் இதுவரை கைது செய்துள்ளனர்.
குறிவைத்து தாக்குதல்
கடந்த பெப்ரவரி 18ஆம் திகதி இரவு மித்ததெனிய கடேவத்த சந்திக்கு அருகில் தனது இரண்டு குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களின் இலக்காக இருந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற "கஜ்ஜா" என்ற நபர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார்.
படுகாயமடைந்த அவரது மகன் மற்றும் மகள் எம்பிலிப்பிட்டிய மற்றும் தங்காலை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மருத்துவ சிகிச்சை பெற்ற போதிலும், தங்காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே ஆறு வயது மகள் உயிரிழந்தார். அதே நேரத்தில் ஒன்பது வயது மகன் மறுநாள் இறந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
