விமான நிலையம் மீண்டும் திறக்கப்படும் போது தவறுகள் சரிசெய்யப்படும்! சுகாதார அமைச்சு
இலங்கையின் சர்வதேச வானூர்த்தி தளம் மீண்டும் திறக்கப்படும் போது ஒரு சில உக்ரைன் சுற்றுலாப் பயணிகளின் தவறுகளை சரிசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு வந்த உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் இலங்கை அரசாங்கம் பரிந்துரைத்த சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றத் தவறிவிட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்தநிலையில் எதிர்காலத்தில் இது சரிசெய்யப்படும் என்று பொது சுகாதார சேவைகளின் துணை பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
தமது சுகாதார அமைச்சு சுற்றுலா அமைச்சகத்துடன் சேர்ந்து சரிசெய்ய வேண்டிய காரணிகளை அடையாளம் கண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலாப் பயணிகள் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறும் போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கும் உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் கொரோனா சிகிச்சைக்கான 11,880 கடடில்களில் 8,096 ஏற்கனவே நோயாளிகளால் நிரப்பப்பட்டுள்ளன.
2,560 கட்டில்கள் எந்த நேரத்திலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றும் பொது சுகாதார சேவைகளின் துணை பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri