ஆணைக்குழுக்கள் அமைப்பது ஏமாற்று நாடகம்: காணாமல் ஆக்கப்பட்டோரினது உறவுகள் (Photos)
வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்த போராட்டமானது வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (30.12.2023) காலை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
கலந்து கொண்ட உறவுகள்
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட உறவுகள் கருத்து தெரிவிக்கையில், சர்வதேச நீதிக்காக போராடி வரும் நாம் பல வருடங்கள் கடந்தும் நீதி மறுக்கப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக ஏமாற்றத்திற்கு உள்ளாகி வருகின்றோம்.
அத்துடன் இலங்கை அரசின் ஆணைக்குழுக்கள் மீதும் அதன் விசாரணைகள் மீதும் நாம் முற்றாக நம்பிக்கை இழந்துள்ளோம்.
இந்த நாட்டில் உள்ளவர்களே போரை உருவாக்கி தமிழர்களை அழித்தார்கள். எனவே அவர்களால் உருவாக்கப்படும் ஆணைக்குழுக்கள் மீதும் அலுவலகங்கள் மீதும் எமக்கு துளியும் நம்பிக்கை இல்லை.
இழப்பீடு வழங்குவதும், மரணச்சான்றிதழ் வழங்குவதுமே அவர்களது நோக்கமாக உள்ளது. எமக்கு அது தேவையில்லை. எமது உறவுகளே தேவை. 12 ஆணைக்குழுக்களுக்கு மேல் அமைத்து விட்டார்கள்.
அனைத்துமே ஏமாற்று நாடகம். எனவே பிறக்கின்ற புதிய வருடத்திலாவது எமக்கான நீதியை வழங்குவதற்கு சர்வதேச சமூகம் முன்வரவேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் '12 ஆணைக்குழுக்களுக்கு மேல் ஏமாற்று நாடகம், ராஜபக்ச குடும்பம் பேரக் குழுந்தைகளை கொஞ்சி மகிழும் போது நாம் பேரக் குழந்தைகளை தேடி வீதியில் நிற்கிறோம், குடும்பங்களாக சரணடைந்த போது அவர்களுடன் சரணடைந்த 29 குழந்தைகள் எங்கே'' என எழுதப்பட்ட அரசிற்கு எதிரான பதாதைகளை ஏந்தியதுடன் கோசங்களை எழுப்பியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
