மனித புதைகுழிக்கு நீதியான விசாரணை வேண்டும்: முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம்(Video)
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டசெயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பாக உரிய விசாரணைகள் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தியே இன்றைய தினம்(07.07.2023) கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு அமைப்பு ஏற்பாடு செய்திருந்தகுறித்த போராட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
காணாமல் போனவர்களின் உறவினர்கள்
குறித்த போராட்டத்தில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் முன்னாள் போராளிகள் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டு இந்த போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
அண்மையில் கொக்குத்தொடுவாய் பகுதியில் நீர்வழங்கலுக்கான குழாய்கள் பதிக்கப்படுவதற்காக தோண்டப்பட்ட போது உடல் எச்சங்களும், ஆடைகளும் கண்டுபிடிக்கப்பட்டு நேற்றைய தினம் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |