தங்க நகை மற்றும் பெருந்தொகை பணத்துடன் அடகு நிறுவன முகாமையாளர் தப்பியோட்டம்
மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இயங்கி வந்த தங்க ஆபரணங்களை அடகுபிடிக்கும் நிறுவனமொன்றின் முகாமையாளர் ஒரு கோடியே 57 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் மற்றும் 17 இலட்சம் ரூபா பணத்தை திருடிக்கொண்டு தப்பியோடியுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் அடகுபிடிக்கும் நிறுவனத்தின் கணக்காளர் நேற்றுஞாயிற்றுக்கிழமை (26) மாவட்ட விசேட குற்ற விசாரணைப்பிரிவிடம் முறைப்பாடு செய்துள்ள நிலையில், மாவட்ட விசேட குற்ற விசாரணைப்பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நகைகள் மாயம்
குறித்த பிரதேசத்தில் இயங்கி வந்த தங்க ஆபரணங்களை அடகு பிடிக்கும் நிறுவனம் ஒன்றில் வெள்ளிக்கிழமை (24) ஆம் திகதி அதன் முகாமையாளர் கணக்காளரை அனுகி நகை அடகு வைத்த வாடிக்கையாளர் ஒருவர் கணவனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அந்த தங்க ஆபரணங்களை பார்ப்பதற்கு வருகை தரவுள்ளதாக கூறி நகைகளை பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து எடுத்து தனது மேசையில் வைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து குறித்த நிறுவனத்தின் கொழும்பு தலைமைக் காரியாலயத்தில் இருந்து அழைத்து இதுவரை வங்கிக்கு பணம் வைப்பிலிடப்படவில்லை என்றும், அதனை வைப்பில் இடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்போது அந்த 17 இலட்சம் ரூபாய் பணத்தை தான் வைப்பில் இடுவதாக கணக்காளரிடம் இருந்து பணத்தை முகாமையாளர் பெற்றுக்கொண்டு,தங்க ஆபரணங்களை வாடிக்கையாளரிடம் காட்டிவிட்டு வருவதாக சுமார் 2.30 மணியளவில் வெளியேறியுள்ளார்.
இதனை தொடர்ந்து அவர் மாலை ஆகியும் திரும்பி வராததையடுத்து அவருடைய கையடக்க தொலைபேசிக்கு தொடர்பினை ஏற்படுத்தியபோது அது நிறுத்தப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
சம்பவம் தொடர்பாக நிறுவன கணக்காளர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தை திருடிச்சென்ற குறித்த முகாமையாளர் நாவலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட விசேட குற்ற விசாரணைப்பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வெளியான உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள்! பல்கலைக்கழகம் செல்ல காத்திருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 36 நிமிடங்கள் முன்
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri