பத்தாயிரம் ரூபா பொதியில் ஆயிரம் ரூபா மரக்கறியை காணவில்லை - பொது மக்கள் கவலை
கோவிட்- 19 காரணமாகத் தனிமைப்படுத்தப்படுகின்ற குடும்பங்களுக்கு அரசினால் கூட்டுறவு அமைப்புக்கள் மூலம் வழங்கப்படுகின்ற 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உணவுப் பொதிகளில் மரக்கறிக்கு என ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ள போதும் பொது மக்களுக்கு அந்த பெறுமதியில் மரக்கறிகள் வழங்கப்படுவதில்லை எனப் பொதிகளைப் பெற்றுக்கொண்ட பல குடும்பங்கள் கவலை தெரிவித்துள்ளன.
கிராமங்களில் கோவிட்- 19 காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களின் விபரங்கள் அந்த பிரதேசத்தைச் சேர்ந்த கூட்டுறவு அமைப்புக்களுக்கு வழங்கப்பட்டு அவர்கள் ஊடாக 10 ரூபா உலருணவுப் பொதி வழங்கப்படுகிறது. இந்த பொதியில் அரிசி, மா,சீனி,பருப்பு,உப்பு, தேயிலை என 15 அத்தியாவசியப் பொருட்கள் அடங்குகின்றன.
இதில் மரக்கறிக்கு 1000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலும் வழங்கப்படுகின்ற பொதிகளில் இரண்டு கிலோவுக்குட்பட்ட பெரிய வெங்காயம், உருளை கிழக்கு மற்றும் பூசணிக்காய் என்பனவே வழங்கப்படுகின்றன. இவற்றுக்கே ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கும் பொது மக்கள் இவற்றின் பெறுமதி ஆயிரம் அல்ல எனவும் தெரிவித்துள்ளனர்.
எனவே இது தொடர்பில் கரைச்சி பிரதேச செயலாளர் ப. ஜெயகாரன் அவர்களிடம்
தொடர்பு கொண்டு வினவிய போது,
கூட்டுறவு அமைப்புக்கள் ஊடாக வழங்கப்படுகின்ற
பொதியில் பொருட்கள் உரிய விலையிலும் தரத்திலும் இருக்க வேண்டும் என்பது
கட்டாயம். அவ்வாறு உரிய விலைக்கும் தரத்திற்கும் பொருட்கள்
வழங்கப்படவில்லை எனில் அது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு நடவடிக்கை
எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam