களுத்துறையில் காணாமல்போயுள்ள 9 வயது சிறுமி! பொது மக்களிடம் உதவி கோரும் பொலிஸார்
களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகம, அட்டுளுகமை பிரதேசத்தைச் சேர்ந்த ஒன்பது வயதுச் சிறுமியொருவர் இன்று காணாமல்போயுள்ளார்.
அட்டுளுகம பிரதேச பாடசாலையொன்றில் நான்காம் தரத்தில் கல்வி கற்கும் முஹம்மது அக்ரம் பாத்திமா ஆயிஷா என்ற சிறுமியே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.
வீட்டுக்கு சற்று தூரத்தில் இருந்த கோழி இறைச்சிக் கடைக்கு இன்று காலை பத்து மணியளவில் சென்றவர் அதன் பின் வீடு திரும்பவில்லை என்று சிறுமியின் பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சிறுமியை தேடிப்பிடிக்க பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளதுடன்,சிறுமி தொடர்பான தகவல்கள் ஏதேனும் அறிந்தவர்கள் 0777075223 இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என்றும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இதேவேளை, சிறுமி கடையை விட்டு வெளியேறுவது அருகில் உள்ள சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளதுடன்,சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam
