கிண்ணியாவில் காணாமல் போன ஐந்து பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்பு
திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணி பகுதியில் கண்டல் தாவரக் களப்பொன்றிலிருந்து, வயோதிபப் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று(12.01.2026) சடலமாக மீட்கப்பட்ட குறித்த பெண், கிண்ணியா, கிரான் பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தாய் என தெரியவந்துள்ளது.
சடலம் மீட்பு
கிண்ணியா, கிரான் பகுதியில் வசித்து வந்த குறித்த பெண், கடந்த ஜனவரி 8ஆம் திகதி பைசல் நகர் பகுதியில் உள்ள தனது பிள்ளைகளின் வீட்டுக்குச் செல்வதற்காக ஆற்றைக் கடந்து சென்றுள்ளார்.

நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாத நிலையில்,
உறவினர்களால் கடந்த 8ஆம் திகதி கிண்ணியா பொலிஸ் நிலையத்தில்
முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த கண்டல் தாவரங்கள் நிறைந்த களப்புப் பகுதியில் இன்று துர்நாற்றம் வீசிய நிலையில், அப்பகுதி மக்கள் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இதன்போது, அங்கு சடலம் ஒன்று காணப்படுவதை அவதானித்த பொதுமக்கள் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வருகை தந்த திடீர் மரண விசாரணை அதிகாரி மற்றும் குற்றப் புலனாய்வுத் தடுப்புப் பிரிவினர் ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட குறித்த பெண் ஆற்றைக் கடக்கும் போது தவறி விழுந்து மரணமடைந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 12 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan