2009இல் இலங்கையில் என்னுடன் படித்த மாணவிகள் பலரைக் காணவில்லை! - சுவிட்சர்லாந்தில் கலங்கும் பெண்
2009ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அவலங்களை நினைவுகூரும் வகையில் சுவிட்ஸர்லாந்து - லௌசான் மாநிலத்தில் புகைப்படங்கள் சில காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
சமூக செயற்பாட்டாளரான கஜன் என்பவரால் இந்த புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கோரியும், அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் வேண்டியும் இந்த புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. லௌசான் மாநிலத்தின் மையப்பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த புகைப்படங்களை பல ஈழத்தமிழர்கள் பார்வையிட்டு வருவதுடன், அவர்களது அனுபவங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
மேலும், லௌசானில் மாநகர சபைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், காட்சிப்படுத்தப்பட்ட இந்த புகைப்படங்கள் பலரது கவனத்தையும் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த புகைப்படங்களை பார்வையிட்ட ஒருவர், தனது உறவுகளை நினைவுகூர்ந்ததோடு, தன்னுடன் படித்த பல மாணவிகள் அச்சமயம் காணாமல் போனதாகவும் தனது துயரினை பகிர்ந்து கொண்டார்.



