காணாமல் போன இளைஞன் மயானத்தில் சடலமாக மீட்பு!
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதூர் பிரதேச மயானத்தில் அழுகிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
புதூர் 5ஆம் குறுக்கை சேர்ந்த 24 வயதுடைய ஜெயகரன் அருஜன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காணாமல் போன இளைஞன்

கடந்த மாதம் 27ஆம் திகதி வீட்டை விட்டு வெளியேறிய இளைஞன் பின்னர் காணாமல் போயுள்ளார்.
இந்தநிலையில் புதூர் மயானத்தில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக பொதுமக்கள் நேற்று (02.10.2022)
பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து தடயவியல் பிரிவு பொலிஸார் சகிதம் சென்று விசாரணைகளின் பின்னர் சடலத்தை மீட்டுள்ளனர்.
நீதிமன்ற அனுமதியை பெற்று பிரேத பரிசோதனைக்காக சடலத்தை வைத்தியசாலையில்
ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான
மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கும்ப ராசியில் புதன் பெயர்ச்சி: பெப்ரவரியில் இந்த 3 ராசிக்காரங்களுக்கு ட்ரிபிள் ஜாக்பாட் தான்! Manithan
இனத்தில் அடிப்படையில் வீடு வாடகைக்கு விட மறுக்கும் ஜேர்மானியர்கள்: கவனம் ஈர்த்துள்ள ஒரு வழக்கு News Lankasri