வெளிநாடொன்றில் காணமல் போன 8 வயது சிறுமி : 19 நாட்களுக்கு பின் கிடைத்த அதிர்ச்சி தகவல்
துருக்கியில் 8 வயது சிறுமி திடீரென்று மாயமான நிலையில், 19 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கியின் தென்கிழக்கு மாகாணமான Diyarbakir-ல் குடும்பத்துடன் வசித்துவந்த 8 வயது சிறுமி Narin Guran திடீரென்று காணமல் போயள்ளார்.
ஒகஸ்ட் 21ஆம் திகதி நடந்த சம்பவத்தில் கிராம மக்கள், குடும்பத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் உட்பட திரளான மக்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மேலதிக விசாரணை
இந்நிலையில் சிறுமியின் விவகாரம் நாடு முழுவதும் பரவிய நிலையில், சமூக ஊடக பிரபலங்கள் சிலரும் இதில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை முன்னெடுத்த பொலிஸார், அவரது உறவினர் ஒருவரை கடந்த வாரம் கைது செய்திருந்தது.

இந்த நிலையில் 19 நாட்களுக்கு பிறகு தற்போது சிறுமி வசித்து வந்த கிராமத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில், நதி ஒன்றில் இருந்து சிறுமியின் உடல் மீடகப்பட்டுள்ளது.
குறித்த தகவலை துருக்கியின் உள்விவகார அமைச்சர் உறுதி செய்துள்ளார். மட்டுமின்றி, சிறுமியின் மரணத்திற்கு காரணமான நபர்களை சட்டத்திற்கு முன் நிறுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என நீதித்துறை அமைச்சரும் தமது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சிறுமி மாயமான விவகாரம் சமூக ஊடகத்தில் பேசுபொருளாக மாறியதுடன், பிரபலங்கள் பலரும் தேடுதல் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri