மன்னாரில் காணாமல் போனதாக தேடப்பட்ட குடும்பஸ்தர் 2 நாட்களுக்கு பின் வீடு திரும்பினார்
மன்னார் - முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழ்க்கைப் பெற்றான் கண்டல் கிராமத்தைச் சேர்ந்த காணாமல் போன குடும்பஸ்தர் மீண்டும் வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (17.04.2026) இடம்பெற்றுள்ளது.
வீடு திரும்பிய குடும்பஸ்தர்
வாழ்க்கைப் பெற்றான் கண்டல் கிராமத்தைச் சேர்ந்த சிறில் என அழைக்கப்படும் அந்தோணி றெமி(48), இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.

இவர், கடந்த 15ஆம் திகதி காலை வீட்டிலிருந்து வெளியேறி சென்றதுடன், பின்னர் வீடு திரும்பவில்லை என அவரது சகோதரி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து, அவர் நேற்றைய தினம்(17.04.2026) மீண்டும் வீடு திரும்பியுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த நபரை கண்டுபிடிக்க உதவிய அனைவருக்கும் உறவினர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
100 ஆண்டுகளின் பின் அட்சய திருதியையில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்! முழு பலன் இந்த ராசிகளுக்கு தான் Manithan
சோழனை நம்பாமல் சேரன், பாண்டி செய்த காரியம், ஆனால் நிலா... அட்டகாசமான அய்யனார் துணை சீரியல் Cineulagam