பிரித்தானியாவில் காணாமல் போன இலங்கை வீரர்கள் - கடும் நடவடிக்கைக்கு தயாராகும் அரசாங்கம்
பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின் போது காணாமல் போன இலங்கை வீராங்கனைகள் மற்றும் அதிகாரிக்கு எதிராக இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு கடுமையான நடவடிக்கை எடுக்க உள்ளது.
இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சின் செயலாளர் கலாநிதி அமல் ஹர்ஷ டி சில்வா கொழும்பு ஊடகம் ஒன்றிடம் இதனை தெரிவித்துள்ளார். "இது அவர்களைப் பற்றியது அல்ல.
இது நாட்டையும் அதன் நற்பெயரையும் பற்றியது. நாங்கள் அவர்களை விசாவிற்கு பரிந்துரைத்துள்ளோம், அதையும் நாங்கள் இடைநிறுத்துவோம். இருப்பினும், இங்கிலாந்தின் குடிவரவு அலுவலகம் இன்னும் ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் விசாவைக் கொண்டிருப்பதால் அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.
எதிர்காலத்தில் விசாவிற்கு விண்ணப்பிப்பவர்களுக்கு இது ஒரு பிரச்சினையாக இருக்கும் என்றும் அவர் கூறினார். காணாமல் போனவர்களில் இருவர் பெருநகரப் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் என கலாநிதி டி சில்வா மேலும் தெரிவித்தார்.
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகருக்குச் சென்ற இலங்கையின் பொதுநலவாய விளையாட்டுக் குழுவின் மொத்த உறுப்பினர்கள் 10 பேர் பிரித்தானியாவில் தங்குவதற்கான சந்தேகத்தின் பேரில் காணாமல் போயுள்ளனர்.
ஒன்பது விளையாட்டு வீரர்கள் மற்றும் ஒரு மேலாளர் தங்கள் நிகழ்வுகளை முடித்த பிறகு காணாமல் போயுள்ளனர்.
அவர்களில் மூன்று பேர் - ஜூடோகா சமிலா திலானி, அவரது மேலாளர் அசேல டி சில்வா மற்றும் மல்யுத்த வீரர் ஷனித் சதுரங்க ஆகியோர் கடந்த வாரம் காணாமல் போயிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பதினாறாவது மே பதினெட்டு 5 நாட்கள் முன்

பாகிஸ்தானை குறிப்பதால் 'மைசூர் பாக்' பெயர் மாற்றம்: இனி இப்படித்தான் அழைக்க வேண்டுமாம் News Lankasri
