ஒட்டுசுட்டானில் காணாமல் போன சிறுவன் கொழும்பில் கண்டுபிடிப்பு
ஒட்டுசுட்டானில் காணாமல் போன 14 வயது சிறுவன் கொழும்பில் வைத்து நேற்றையதினம்(11) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், குறித்த சிறுவன் பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒட்டுசுட்டான் இடதுகரை, முத்தையன்கட்டு, பிரதேசத்தை சேர்ந்த அசோக்குமார் அரவிந்தன் 14 வயதுடைய சிறுவன் கடந்த 05.12.2025 வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
வைத்தியசாலையில் அனுமதி
அன்றையதினம் வீட்டிலிருந்து வலதுகரையில் உள்ள கடை ஒன்றிற்கு பொருட்கள் வாங்கச் சென்றிருந்த நிலையில் அவர் இதுவரை வீடு திரும்பவில்லை.

சிறுவன் குறித்த கடையில் பொருட்கள் வாங்கிச் செல்வதாக உள்ள CCTV காட்சிகள் பதிவாகியிருந்தது.
குறித்த முறைப்பட்டுக்கமைய கடந்த 05.12.2025 காணாமல் போன சிறுவன் தான் கொழும்பில் உள்ளதாக உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தப்பட்டதனை தொடர்ந்து உறவுகளால் சிறுவன் அழைத்து வரப்பட்டு நேற்றையதினம் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலைய நிலையம் ஊடாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக நடவடிக்கை
இதனையடுத்து, பரிசோதனைகளின் பின்னர் முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன் சிறுவனின் ஆரோக்கிய நலன் கருதி மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தன்னை யாரும் கடத்தவில்லை எனவும் தான் வேலை தேடி சென்றதாகவும் சிறுவனால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரம்பின் மிகப்பெரிய திட்டம்... ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நான்கு நாடுகளை குறிவைக்கும் அமெரிக்கா News Lankasri
என்னை எப்படி அப்படி கூறலாம், கண்டிப்பாக புகார் அளிப்பேன்... சீரியல் நடிகை கம்பம் மீனா காட்டம் Cineulagam
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri