உக்ரைனை அதிர வைக்கும் ரஷ்ய ஏவுகணைகள்-சரமாரியாக தாக்குதல்-செய்திகளின் தொகுப்பு
ரஷ்யா தாக்குதலுக்கு பயன்படுத்திய 70 ஏவுகணைகளில் பெரும்பாலானவை சுட்டு வீழ்த்தப்பட்டதாக, உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல்களில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மின் விநியோகம் தடைபட்டு இருப்பதால், பல இடங்களில் அவசரகால மின்தடை தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
உறைபனி நிலவும் பல பகுதிகள், மின்தடையால் மீண்டும் இருளில் மூழ்கியதாகவும், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் துண்டிக்கப்பட்டு, மக்கள் அவதிக்குள்ளாகி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா பொதுமக்களை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தி வருவதால், இதனை போர்க்குற்றம் என்றும் ஜெலன்ஸ்கி விமர்சித்துள்ளார்.
உக்ரைனின் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம் என்றும் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி சூளுரைத்துள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான மாலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,