ஏவுகணை தாக்குதலில் சிக்கி உயிருடன் மீட்கப்பட்ட பெண் - உலக செய்திகளின் தொகுப்பு (video)
உக்ரைனில் டினிப்ரோவில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் பெண் ஒருவர் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட உக்ரைனின் தென்கிழக்கு நகரமான டினிப்ரோவில் குடியிருப்பு கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து மீட்புப் பணியாளர்களால் ஒரு பெண் உயிருடன் மீட்கப்பட்டார்.
மீட்புப் பணியாளர்களால் ஒரு பெண் காப்பாற்றப்பட்ட காணொளியை உக்ரைன் உள்துறை அமைச்சரின் ஆலோசகர் அன்டன் ஜெராஷ்செங்கோ டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
குறித்த காணொளியை வெளியிட்ட அவர், “டினிப்ரோவில் இடிபாடுகளில் இருந்து ஒரு பெண் மீட்கப்பட்டார். அதுவும் உயிருடன்! இந்தப் படங்களைப் பார்த்து, அது நாமாக இருந்திருக்கலாம் என்பதை உணர்கிறோம்.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான உலக செய்திகளின் தொகுப்பு,

ஸ்ருதியிடம் கேள்வி கேட்கப்போய் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

பிடிப்பட்ட ரித்தீஷ்.. குத்தாட்டம் போட்ட செல்வி மகன்- காதல் தோல்விக்கு கம்பெனி கொடுத்த அம்மா Manithan
