இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்: ஹூதி அமைப்பினர் அறிவிப்பு
இஸ்ரேலின் முக்கிய இராணுவ இலக்குகளை நோக்கிப் பல பெலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவித் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
ஈரான், லெபனான், ஈராக் மற்றும் பாலஸ்தீனப் பகுதிகளில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும், அனைத்து முனைகளிலும் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வரும் வரை தங்களது இராணுவ நடவடிக்கைகள் தொடரும் என்றும் ஹூதி அமைப்பு எச்சரித்துள்ளது.
நேரடித் தாக்குதல்
இதற்கிடையில், ஏமனிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணையைத் தங்களது வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக வழிமறித்து அழித்து விட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை உறுதிப்படுத்தியுள்ளது.

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில், ஹூதிகளின் இந்த நேரடித் தாக்குதல் பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.