மிஸ் மற்றும் மிசஸ் தமிழ் யுகே மற்றும் ஐரோப்பா அழகி போட்டி
மிஸ் தமிழ் யுகே மற்றும் ஐரோப்பா அழகி போட்டியின் இறுதிப்போட்டி செப்டம்பர் 20ஆம் திகதி London Hilton-இல் நடைபெறவுள்ளது.
மிஸ் தமிழ் யுகே மற்றும் ஐரோப்பா அழகி போட்டியானது வெறுமனே ஓர் அழகிப் போட்டி கிடையாது.
இந்தப் போட்டி தமிழ் பெண்களை கொண்டாடும் வகையிலும் அவர்களது நம்பிக்கையை மேம்படுத்தி அவர்களது திறமைகளையும் வெளிப்படுத்தக் கூடிய வகையில் இந்த போட்டி அமைந்துள்ளது.
கலாச்சார பெருமை
இதன் மூலம் தமிழ் சமூகத்தில் அவர்கள் முன்னுதாரணமாக திகழ்வதற்கு வழியமைத்து கொடுக்கப்படுகின்றது.

வலுவூட்டப்பட்ட பெண் ஏனையவர்களை வலுவூட்டுகிறார் என்ற கூற்றுக்கு அமைவாக இந்த நிகழ்வு அமையப்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வின் ஊடாக பங்கு பெற்று பெண்கள் ஓர் புதிய எல்லைகளை தொடுவதற்கு குறிப்பாக தனிப்பட்ட ரீதியிலும் தொழில்முறையிலும் புதிய எல்லைகளை எட்டுவதற்கு இந்த நிகழ்வு ஊக்கம் அளிக்கின்றது.
தமிழ் பெண்கள் தங்கள் அழகை வெளிப்படுத்தவும் கலாச்சார பெருமையை உணர்த்தவும் தங்களது திறமைகளை வெளிக்கொணரவும் ஓர் களமாக எமது இந்த அழகிப்போட்டி மேடை அமைந்துள்ளது.
உலக அழகி போட்டி
எனினும் எங்களது நோக்கம் இந்த பெண்களை இந்த போட்டியில் காண்பித்து வெற்றிபெறச் செய்வது மட்டுமல்ல.

மிஸ் தமிழ் பிரித்தானியா மற்றும் ஐரோப்பா உலக அழகி போட்டி அறக்கட்டளைகளுக்கு நிதி திரட்டுதல் உள்ளிட்ட பல்வேறு உன்னத நோக்கங்களுக்கு உதவிகளை வழங்குகின்றது.
இந்த திட்டத்தின் ஊடாக பெண்களுக்கு உதவவும் ஊக்கமளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் ஊடாக தாயகத்தில் எமது சமூகத்தைச் சேர்ந்த பெண்களை வலுவூட்ட முடிகின்றது.
இந்தப் போட்டியின் ஊடாக துன்புறுத்தல்களினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதி ரீதியாகவோ அல்லது வாழ்க்கையை மாற்றக்கூடிய ஜீவனோபாய வழிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் ஊடாகவோ அவர்களுக்கு உதவிக் கரம் நீட்டவும் முடிகின்றது.
மெய்யாகவே தயாகத்தில் பெண்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கக் உதவி பொறிமுறையை உருவாக்குவது எமது திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
தைரியம், அழகு மற்றும் குறிக்கோள் என்பவற்றின் கலவையாக துணிச்சலும், அழகும், குறிக்கோளும் ஒன்றிணைந்து, வலுவூட்டக்கூடிய கருணை நிரம்பிய மனப்பான்மையுடைய போட்டியாளர்களின் திறமைகளுக்கு இடையிலான பலப்பரீட்சையாக இந்த நிகழ்வு அமையப் பெறுகின்றது.
இறுதிப் போட்டி
திறமையும் குரல்கொடுக்கும் தன்மையும் இணைக்கும் பாலமாக நாம் செயற்படுகின்றோம்.

இந்த பயணம் ஆடிஷன்கள், காலிறுதிப் போட்டிகள், அரையிறுதிப் போட்டிகள் என தொடர்ந்து, கலாசாரம், சிறப்புத்தன்மை மற்றும் அழகை கொண்டாடும் சிறப்பான பெரும் இறுதிப் போட்டியில் உச்சம் தொடுகின்றது.
பிரபல நடுவர்களின் பங்கேற்புடன் இந்த நிகழ்வு மிளிரும் நிகழ்வுகள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுடன், இது இந்த ஆண்டின் தவறவிட முடியாத நிகழ்வாக அமையப் பெறும்.
இந்த ஆண்டு செப்டம்பர் 20ஆம் திகதி London Hilton-இல் நடைபெறும் Grand Finale-இல் எங்களுடன் இணைந்திடுங்கள் – குறிக்கோளும் அழகும் ஒரு சேரும் இடம்...
இந்த நிகழ்வுக்கான டிக்கெட்டுகளை Linkஐ அழுத்துவதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
மஹா சிவராத்திரி 2026 நேரலை
12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! Manithan
கும்பத்தில் சனி, சூரியன் சேர்க்கை... இந்த 3 ராசியினர் ஜாக்கிரதை! எச்சரிக்கும் ஜோதிட நிபுணர்கள் Manithan