மினுவாங்கொடை என்பிபி தலைவர் இராஜினாமா
மினுவாங்கொடை நகர சபையின் தலைவரான தேசிய மக்கள் சக்தி கட்சியின் அசேல விக்ரமாராச்சி, தனது பதவியை இராஜினாமாச் செய்ய தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இன்று நடைபெற்ற சிறப்பு சபை அமர்வின் போது அவர் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
எந்தவொரு தரப்பின் அழுத்தத்தின் காரணமாகவும் தான் இந்த முடிவை எடுக்கவில்லை. தனது சொந்த விருப்பத்தின் பேரில் இந்த முடிவை எடுத்ததாகவும், ஆறு மாத காலத்திற்குப் பின்னர் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

தனது இராஜினாமாவை தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதாகவும், மினுவாங்கொடை நகர சபை வரலாற்றில் ஒரு தலைவர் தனது பதவியை தானாக முன்வந்து இராஜினாமாச் செய்வது இதுவே முதல் முறையாகும்.