அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு அவதானம் - கிங் கங்கை கரையோர மக்களுக்கு அவசர அறிவிப்பு
சீரற்ற வானிலை காரணமாக கிங் கங்கையை சூழவுள்ள பல தாழ்நில பகுதிகளுக்குச் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு அபாயம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீர்ப்பாசன திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தற்போது வரை பதிவாகியுள்ள மழை வீழ்ச்சிக்கமைவாக, எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் சிறிய அளவிலான வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
தாழ்நிலப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு எச்சரிக்கை
இதற்கமைய, கிங் கங்கையைச் சார்ந்த தவலம, நாகொட, பத்தேகம மற்றும் வலிவிட்டிய - திவிதுர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட கிங் கங்கைப் பள்ளத்தாக்கின் தாழ்நிலப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே அப்பகுதி மக்கள் இது குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது.