இளைஞர் விவகார விளையாட்டு அமைச்சின் தலைமையில் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு! (Photos)
இளைஞர் விவகார விளையாட்டு அமைச்சின் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் தொழில் வழிகாட்டல் வாரத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.
இந் நிலையில் ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாடசாலைகளில் இருந்து பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம்.ஐ.அஸீஸ், மட்டக்களப்பு மத்தி உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.யூ.எம்.இஸ்மயில், மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்கள உத்தியோகத்தர் கோகிலா சிவானந்தன், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம அதிகாரி, பாடசாலை ஆசிரியர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது இளைஞர் விவகார விளையாட்டு அமைச்சின் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் தொழில் வழிகாட்டல் வாரத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட கட்டுரை, பேச்சு, கவிதை, வினாடிவிடை போட்டியில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடம் மற்றும் பங்குபற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.










