அரசாங்கத்துக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவோம்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை
நீதிமன்றங்களால் வழங்கப்பட்டுள்ள இடைக்கால தடையுத்தரவுகளை மீறி அரசாங்கம் மருந்துகளை கொள்வனவு செய்ய முற்படுமாயின் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளுக்கு செல்ல வேண்டி ஏற்படும் என வைத்தியர் சமல் சன்ஜீவ தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எமது நாட்டில் மருந்து கொள்வனவு மற்றும் வழங்கல் கட்டமைப்பு தடைப்பட்ட சந்தர்ப்பத்தில் பல நிறுவனங்கள் உயர் ,மேன் முறையீட்டு நீதிமன்றங்களில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அது தொடர்பில் பல இடைக்கால தடை உத்தரவுகள் சுகாதார அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மருந்து கொள்வனவு
2015 ஆம் ஆண்டு மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபையினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சட்ட திட்டங்களை மீறுவதற்கு சுகாதார அமைச்சுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை.
ஆகையால் சட்ட கட்டமைப்புகளுக்கு மாற்றமாக மருந்து கொள்வனவு மற்றும் டெண்டர் கோரல் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபடுமாயின் அதற்கு எதிராக செயற்பட நாம் பின்நிற்க மாட்டோம்.
சட்ட நடவடிக்கை
மருந்து கொள்வனவில் தனியார் நிறுவனம் மற்றும் தனி நபர்களுக்கு அரசியல்வாதி அல்லது அரசாங்கம் தன்னிச்சையான அனுமதி வழங்குமாயின் அது நீதிமன்ற அவமதிப்பாகும்.
அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அரசு அதை மீறினால் கெஹலிய ரம்புக்வெல்ல போன்றோருக்கு நேர்ந்த கதியே இன்றுள்ளவர்களுக்கும் ஏற்படலாம்" எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 2 நாட்கள் முன்

மகாநதி சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் கோமதி பிரியா.. குவியும் வாழ்த்துக்கள் Cineulagam
