பிரேசிலில் இலங்கைத் தூதுவரால் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஆரம்பித்து வைப்பு
பிரேசிலில் உள்ள இலங்கைத் தூதரகம் ''லத்தீன் அமெரிக்காவில் இலங்கையை மேம்படுத்துதல்'' என்ற தலைப்பில் தொலைக்காட்சி விளம்பரம் ஒன்றை ஆரம்பித்து வைத்துள்ளது.
பிரேசிலுக்கான இலங்கைத் தூதுவர் சுமித் தசநாயக்கவினால் இத்தொலைக்காட்சி நிகழ்ச்சி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள வாய்ப்புகள்
இலங்கையில் அடையாளம் காணக்கூடிய பன்முகத்தன்மை மற்றும் தனித்துவம் தொடர்பான விடயங்களை இதில் வெளிக்கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் இலங்கைத் தூதுவர் கொழும்பு துறைமுக நகரத் திட்டம் குறித்து குறிப்பிட்டுள்ளதுடன் வர்த்தகம், சுற்றுலா மற்றும் முதலீட்டுத் துறையில் பிரேசில் மற்றும் தென் அமெரிக்கர்களுக்கு இலங்கையில் உள்ள வாய்ப்புகள் குறித்து விளக்கமளித்துள்ளார்.