வீதி நிர்மாணத்துக்கு ஒப்புதல் வழங்குவதை மறுத்துள்ள சுற்றுச்சூழல் அமைச்சு
சிங்கராஜா வனப்பகுதி வழியாக எந்தவொரு வீதி நிர்மாணத்துக்கும் ஒப்புதல் வழங்குவதை சுற்றுச்சூழல் அமைச்சு இன்று(04) மறுத்துள்ளது.
அத்துடன் அத்தகைய எந்தவொரு திட்டத்துக்கும் எந்த ஆதரவும் வழங்கப்படாது என்று உறுதியளித்துள்ளது.
சிங்கராஜா வனப்பகுதி வழியாக வீதியொன்றை அமைப்பது குறித்த சமீபத்திய ஊடக அறிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக இதனை அறிவித்துள்ளது.
வீதி அமைப்பதற்கு எந்த ஆதரவையும்
சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான வழிமுறையாக வீதி அமைப்பது குறித்து இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற குழு கூட்டத்தில் ஒரு திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மாவட்டக் குழு பிரதிநிதிகள் குழு அந்தப் பகுதிக்கு ஆய்வு விஜயம் செய்ததாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அமைச்சு அல்லது வனவிலங்குத் திணைக்களம் இந்த முன்மொழிவை அங்கீகரிக்கவில்லை என்றும், அத்தகைய வீதி அமைப்பதற்கு எந்த ஆதரவையும் வழங்க வேண்டாம் என்று அமைச்சு முடிவு செய்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



