கல்வி அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை!
இணைய வழியில் பகிரப்படும் தகவல்கள் தொடர்பில் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமூக வலைத்தளங்கள் மற்றும் குறுஞ்செய்தி செயலிகள் மூலம் பரப்பப்பட்டு வரும் போலியான மற்றும் திருத்தப்பட்ட அதிகாரபூர்வ சுற்றுநிரூபங்கள் குறித்துப் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
பொய் தகவல்களைப் பரப்பும் போக்கு
இது தொடர்பாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிகாரப்பூர்வ சுற்றுநிரூபங்களை உருமாற்றி, இணையவழி ஊடாகப் பொய் தகவல்களைப் பரப்பும் போக்கு அதிகரித்து வருவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான தவறான தகவல்கள் ஆசிரியர்கள், அதிபர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை விளைவிக்கக் கூடும் என அமைச்சு கரிசனை வெளியிட்டுள்ளது.

போலி சுற்றுநிரூபங்கள்
அதற்கமைய, அமைச்சு வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் சுற்றுநிரூபங்களை மட்டுமே துல்லியமானதாகவும் செல்லுபடியாகும் ஒன்றாகவும் ஏற்றுக்கொள்ளுமாறு பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கேட்கப்பட்டுள்ளது.
மேலும், இவ்வாறான போலியான அல்லது மாற்றியமைக்கப்பட்ட சுற்றுநிரூபங்களைக் கண்டு ஏமாற வேண்டாம் எனவும், அத்தகவல்களைச் சமூக வலைத்தளங்கள் மற்றும் குறுஞ்செய்தி தளங்கள் வழியே மற்றவர்களுக்குப் பகிர்வதைத் தவிர்க்குமாறும் அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
தீவிர புயலாக மாறப்போகும் அர்னாப்! அவசர அறிவுறுத்தல்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவிப்பு
இன்னும் 1,000 நாட்களுக்குள்... பிரித்தானிய மக்களைத் தயாராக இருக்க அரசாங்கம் வலியுறுத்தல் News Lankasri
எனது பிள்ளைகளை ஒருபோதும் பார்க்க மாட்டீர்கள்: தந்தை தாமஸிற்கு மேகன் மெர்க்கலின் கடைசி கடிதம் News Lankasri