மக்களே ஏமாற வேண்டாம்! கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு
கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி போலி தகவல் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
அறிக்கை
இந்த விடயம் தொடர்பில் தெளிவூட்டும் வகையில் கல்வியமைச்சின் ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த போலி செய்திகள் சமூக ஊடகங்களில் மட்டுமே பரப்பப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை அந்த செய்தி கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகமோ அல்லது இலங்கை பரீட்சைகள் திணைக்களமோ அத்தகைய எந்த முடிவையும் எடுக்கவில்லை என்பதையும் கல்வியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
போலிச் செய்தி
இந்நிலையில் ''இம்முறை நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் விஞ்ஞான பாடத்தின் பரீட்சை வினாத்தாள் பாடத்திட்டத்திற்கு அப்பால் வினாத்தாள் மாற்றப்பட்டுள்ளதுடன் வினா முறையும் மாற்றப்பட்டுள்ளது.
இதற்கு தீர்வாக, விஞ்ஞானப் பாடத்திற்குத் தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் கூடுதலாக 08 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
அத்துடன் ஒவ்வொரு தேர்ச்சிக்கும் மதிப்பெண் அளவுகள் 10 மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளன எனவும் 65 மதிப்பெண்களுக்கு மேல் பெறுபவர்களுக்கு சிறந்த தேர்ச்சி ( ஏ ) வழங்கப்படும்'' என அந்த போலி செய்தி சமூக ஊடகங்களில் பரவி வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் இதுபோன்ற போலிச் செய்திகளைக் கண்டு பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று கல்வியமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

பட்டலந்த இடிமுழக்கம் மழையைத் தராது 2 நாட்கள் முன்

மூளையில் பொருத்தப்பட்ட எலான் மஸ்க் நிறுவன சிப் - நினைப்பதன் மூலம் செயல்களை செய்யும் நபர் News Lankasri

சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த ஐஏஎஸ் அதிகாரி.., தற்போது ஆட்சியராக நியமனம் News Lankasri
