கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு முன்னால் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் (Video)
பின்தங்கிய நிலையில் உள்ள பாடசாலையில் ஐந்து வருடங்கள் கடமையாற்றிய போதிலும் இடமாற்றம் வழங்கப்படாமையை கண்டித்து கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு முன்னால் ஆசிரியர்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
2023 ஆம் ஆண்டுக்கான இடமாற்ற விண்ணப்ப படிவம் கடந்த 2022ம் ஆண்டு ஜீலை மாதம் அளவில் ஐந்து வருடங்கள் கடமையாற்றியவர்களுக்கு இடம் மாற்றம் வழங்குவதாக கூறி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு இடமாற்றம்
இருந்த போதிலும் தற்போது ஆறு வருடங்கள் கடமையாற்றிய ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படுவதாக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாகவும் இருநூறு கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்து வருகை தந்து பின்தங்கிய நிலையில் உள்ள பாடசாலைகளுக்கு சென்று மாணவர்களுக்கு கல்வியை புகட்டுவதாகவும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
பின்தங்கிய நிலையில் உள்ள பாடசாலைகளில் ஐந்து வருடங்கள் கடமையாற்றிய ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட இருந்த இடமாற்றத்தை கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் தடுத்து நிறுத்தியமை மன வருத்தத்தை ஏற்படுத்துவதாகவும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கடந்த ஐந்து வருடங்கள் பின்தங்கிய நிலையில் உள்ள பாடசாலைகளில் கடமையாற்றிய ஆசிரியர்களுக்கு இடமாற்றத்தை வழங்குமாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தரவுகள் மாத்திரமே சேகரிக்கப்பட்டுள்ளது
இது தொடர்பாக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் புள்ளி நாயகத்திடம் வினவிய போது,
”இன்னும் இட மாற்றங்கள் எவருக்கும் வழங்கப்படவில்லை எனவும், தற்போது தரவுகள் மாத்திரம் பெறப்பட்டு வருவதாகவும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தவறான முறையில் எவரோ வழங்கிய தகவலின் அடிப்படையில் தேவையற்ற விதத்தில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும்” தெரிவித்துள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 22 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
