வெளிநாட்டு வேலைகளுக்காக விண்ணப்பிக்கும் இலங்கையர்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தல்
போலி வேலைவாய்ப்பு விளம்பரங்கள் மூலம் சைபர் குற்ற மையங்களுக்கு இலங்கை உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களை ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிழக்கு ஆசியாவில் இயங்கும் சைபர் குற்ற மையங்களுக்கு இலங்கை உட்பட பல நாடுகளைச் சேர்ந்தவர்களை மோசடியாக ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கை நடைபெறுகிறது.
சைபர் குற்ற மையங்கள்
ஐடி துறையில் வேலை வழங்குவதாகக் கூறி, இலங்கை உட்பட பல நாடுகளைச் சேர்ந்த சுமார் 50,000 பேரை ஆட்சேர்ப்பு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்தகைய ஐந்து சைபர் குற்ற மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சமூக ஊடகங்கள் மூலம் போலி வேலை விளம்பரங்கள் பரப்பப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில வாரங்களில், இத்தகைய மோசடி மையங்களுக்கு 11 இலங்கையர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர்.
ஆட்சேர்ப்பு
மேலும், இலங்கையில் வசிப்பவர்களுக்கு அப்பால், டுபாயில் பணிபுரியும் இலங்கையர்களும் ஐடி வேலை வாய்ப்புகள் என்ற போர்வையில் இம்மையங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர்.
எனவே, தாய்லாந்து, மியான்மார், கம்போடியா, லாவோஸ் போன்ற நாடுகளில் வேலை வாய்ப்புகள் இருப்பதாகக் கூறி சமூக ஊடகங்களில் பரப்பப்படும் விளம்பரங்களுக்கு பதிலளிக்கும்போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி வெள்ளி, சக கிடாய் வாகன உற்சவம்




