விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் விலங்குகளை கொல்ல அரசு வழங்கியுள்ள அனுமதிக்கு இ.தொ.கா எதிர்ப்பு
விவசாய நிலங்களுக்குள் உட்புகும் விலங்குகளை கொல்வதற்கு விவசாய அமைச்சு வழங்கியுள்ள அனுமதிக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் இந்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
விவசாய அமைச்சின் அனுமதி
முன்னதாக விவசாயத்துக்கு ஊறு விளைவிக்கும் குரங்குகள், மயில்கள் அணில்கள், பன்றிகள் மற்றும் முள்ளம் பன்றிகளை கொல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்திருந்தார்.
எனினும் மனிதர்களுக்கு ஆபத்து விளைவிக்காது உணவை தேடி செல்லும் விலங்குகளை கொல்வது என்பது பெரிய அநீதியாகும் என்று செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனிதன், காடுகளை அழித்து கட்டடங்களை கட்டுதல் மற்றும் இயற்கைக்கு ஒவ்வாத விடயங்களை மேற்கொள்வதன் காரணமாக ஏற்படும் உணவு பற்றாக்குறையால் தமது உணவு தேவையை பூர்த்தி செய்துகொள்ள மனிதன் வசிக்கும் பகுதிகளுக்கு விலங்குகள் வருகின்றன.
அதிகாரியின் மீது சட்ட நடவடிக்கை
ஆகவே காடுகளை அழித்து கட்டடங்களை நிர்மாணிக்க அனுமதி வழங்கிய அதிகாரியின் மீதும் திணைக்களத்தின் மீதும் முதலில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர விலங்குகள் மீது அல்ல.
எனவே இந்த முடிவை உடனடியாக விவசாய அமைச்சு மீளப்பெற வேண்டும் என இலங்கை
தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam

சிறுவயதில் முத்துவிற்கு என்ன ஆனது, மனோஜ் என்ன செய்தார்... சிறகடிக்க ஆசை சீரியல் ஷாக்கிங் புரொமோ... Cineulagam
