எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும் அமைச்சர்கள்
ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் எரிபொருள் பயன்பாட்டை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நாட்டில் நிலவும் எரிசக்தி நெருக்கடியை முன்னிட்டு, அனைத்து அமைச்சர்களும் மற்றும் துணை அமைச்சர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டின் மூன்றில் ஒரு பகுதியை விட அதிகமாக தன்னார்வத்துடன் குறைத்துள்ளதாக பொது நிர்வாக அமைச்சர் சந்தன அபேரட்ன தெரிவித்துள்ளார்.
நாட்டின் மக்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட வேண்டும் என்ற நோக்கில், அனைத்து அமைச்சர்களும் ஒருமித்த முடிவாக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த முடிவைத் தொடர்ந்து, அமைச்சக செயலர்கள் உள்ளிட்ட உயர்நிலை அதிகாரிகளும் தங்களது எரிபொருள் பயன்பாட்டை கணிசமாகக் குறைத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், அவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு அனைத்து அரச நிறுவனத் தலைவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், மின்சாரத்தைச் சேமிக்கும் நடவடிக்கையாக, மக்கள் அதிக மின்சார பயன்பாடு ஏற்படும் நேரமான மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை மின்சாரத்தை குறைவாக பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.