புலனாய்வாளர்களை களமிறக்கிய கோட்டாபய! பெரும் கலக்கத்தில் அமைச்சர்கள்?
அரசாங்க அமைச்சர்களுக்குப் பின்னால் புலனாய்வுப் பிரிவினர் களமிறக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலையடுத்து அரசாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு பெரும் கலக்கத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றும் இது தொடர்பில் அரசாங்க அதிகாரிகளுடன் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2ம் திகதி இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து சுசில் பிரேமஜயந்த ஜனாதிபதியால் அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டார். அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சித்ததன் காரணமாக அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார்.
எவ்வாறாயினும், சுசில் பிரேமஜயந்தவின் பதவி நீக்கம் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இடம்பெற்றதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி அண்மையில் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய சுசில் பிரேமஜயந்த, அரசாங்க எம்.பி.க்களின் பின்னால் புலனாய்வுப் பிரிவினர் களமிறக்கப்படுவதும், பின்வரிசை எம்.பி ஒருவருக்கு இவ்வாறான தகவல் கிடைத்துள்ளமை அனைவரும் அவதானிக்க வேண்டிய விடயமாகும் என கூறியிருந்தார்.
இவ்வாறான நிலையிலேயே, அரசாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு பெரும் கலக்கத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam