பதவிகளை இழந்தாலும் படைப் பரிவாரங்கள் தொடர்ந்தும்
அமைச்சு பதவிகளை இழந்த முன்னாள் அமைச்சர்களில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்திய உத்தியோகபூர்வ வாகனங்கள் போன்றவற்றை மீள கையளிக்கவில்லை என தெரியவருகிறது.
அது மட்டுமல்லாது அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சரவை பாதுகாப்பு பிரிவின் பாதுகாப்பும் இன்னும் நீக்கப்படவில்லை என அரசாங்கத்தின் தகவல்கள் கூறுகின்றன.
இந்த அமைச்சர்களில் பெரும்பாலானவர்கள் அரசின் உத்தியோபூர்வ இல்லங்களில் தொடர்ந்தும வசித்து வருகின்றனர். அமைச்சு பதவிகளில் விலகியவர்கள் அல்லது நீக்கப்பட்டவர்கள் இரண்டு மாதங்கள் வரை உத்தியோகபூர்வ இல்லங்களில் தங்கி இருக்க சட்ட ரீதியாக அனுமதி வழங்கப்படும்
கடந்த 18 ஆம் திகதி புதிய அமைச்சரவை பதவியேற்றதுடன் சுமார் 16 முன்னாள் அமைச்சர்கள் தமது பதவிகளை இழந்தனர். இவர்களில் பலர் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ள போவதில்லை முன்கூட்டியே ஜனாதிபதிக்கு அறிவித்திருந்தனர்.