சர்வகட்சி அரசாங்கத்தில் திறமைகளின் அடிப்படையில் அமைச்சு பொறுப்புகள்
சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் போது அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் செவிமடுத்து திறமைகளின் அடிப்படையில், அமைச்சு பொறுப்புக்களை பகிர எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு நாராஹென்பிட்டி எலிப்பிட்டிகல மாவத்தையில் அமைந்துள்ள ராமஞ்ஞை நிக்காய பௌத்த பீடத்தின் தலைமையகத்திற்கு சென்ற ஜனாதிபதி, மாநாயக்கர் மகுலேவே விமல தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டதுடன் அதன் பின்னர் பௌத்த பிக்குகளை சந்தித்த போதே இதனை கூறியுள்ளார்.
சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை வெற்றி
சர்கட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக அரசாங்கம் தற்போது சில அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அந்த பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளது.
இந்த கட்சிகளின் பல்வேறு கொள்கைகளை கொண்ட அணிகள் இருக்கின்றன. பேச்சுவார்த்தையில் பெரும்பான்மையான நிலைப்பாடுகளுக்கு இடமளித்து, சரியான வேலைத்திட்டத்தை நாட்டுக்காக முன்வைப்பது இதன் நோக்கம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 3 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
